முன்னாள் அமைச்சர் பொன்முடி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைபார்வையிட்டார்.
கோட்டக்குப்பம் கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெள்ளக் காடாக மாறியது. குறிப்பாக பர்கத் நகர், ரகமத் நகர், கோட்டக்குப்பம் ரவுண்டானா, கோவில்மேடு, புறா தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை தேங்கி தனித்தீவு போல காட்சியளிக்கிறது. அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோட்டக்குப்பம் முதல் சின்னமுதலியார்சாவடி வரை உள்ள இசிஆர் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நீரில் மிதந்தபடி செல்கின்றன. குளங்கள் ஆக்கிரமிப்பு, வாய்க்கால் தூர்வாராதது போன்ற காரணங்களால் தற்போது கோட்டக்குப்பம் பகுதியே தண்ணீரில் மிதக்கிறது.
இதையடுத்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கோட்டக்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து கோவில்மேடு பகுதியில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து சறுக்கு பாலம், பர்கத் நகர் ஆகிய பகுதிகளிலும் பார்வையிட்டார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.