கோட்டக்குப்பத்தில் அதிக அளவு மழை பெய்தும் நிரம்பாத பள்ளிவாசல் குளம்
கோட்டக்குப்பத்தில் அதிக அளவு மழைபெய்தும் பள்ளிவாசல் அருகே உள்ள குளம் நிரம்பவில்லை. அதனால், ஊரில் இருந்து மழை நீர் வரும் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் .
கோட்டகுப்பம் பகுதியின் நீர் ஆதாரங்களில் ஒன்றாக ஜாமியா மஸ்ஜித் அருகே உள்ள குளம் இருந்து வந்தது. இந்தக் குளத்தில் பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்தக் குளத்தில் நீர் நிரம்பியவுடன் அருகே உள்ள தென்னந்தோப்புக்கு நீர் வடிந்து செல்லும். இந்த வருடம் கோட்டகுப்பம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் நல்ல கனமான மழை பெய்துள்ளது. ஆனாலும் பள்ளிவாசல் அருகே உள்ள குளம் நிரம்பவில்லை. இதற்கு குளம் மற்றும் அதை சுற்றி முழுவதும் முள்செடிகள் பரந்து விரிந்து வளர்ந்து வருவதாலும், நீர் வழிப் பாதைகள் மண்களால் அடைக்கப்பட்டு மழை நீர் குளத்துக்கு செல்லாமல் பல வகைகளில் பிரிந்து செல்வதுமே காரணம். இந்த குளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்படுவதால் குளத்தில் உள்ள முள்செடிகளை அகற்றி குளத்துக்கு வரும் நீர் வழிப் பாதைகளை செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.