தமிழ்நாடு மற்றும் புதுவையில் சமிபத்தில் பெய்த மழையால் கோட்டகுப்பம் பர்கத் நகர், சின்ன கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர், வெளியேற வழியில்லாமல், தெருக்களில் தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது.சில தெருக்களில் சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து தேங்கி நிற்கின்றன. இதனால், மக்கள் வெளியே வர முடியாமல், வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய் செல்லும் வழிகளில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், தண்ணீர் போக வழியில்லாமல் தெருக்களிலேயே குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய தண்ணீரில் நடந்தால் வியாதிகள் ஏற்படும் அச்சம் உள்ளது. குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள் என, அனைத்து தரப்பு மக்களும் இத்தெருக்களில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.அவசரத் தேவைக்குக் கூட, பல தெருக்களுக்கு ஆட்டோக்கள் வர முடியாத நிலை உள்ளது. மழை நீர் வெளியேற வழியில்லாததே, தண்ணீர் தேங்கியதற்கு காரணம். ஒவ்வொரு மழைக் காலத்திலும், இப்பகுதி மிதப்பதும், அதிகாரிகள் சமாளிப்பதும், மழைக் காலம் முடிந்ததும், அப்படியே விட்டு விடுவதும் தொடர் கதையாக உள்ளது. பர்கத் நகர் மற்றும் தாழ்வாக உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நிரந்தர தீர்வாக சாலை ஓரம் வாய்கால் அமைத்து தண்ணீர் வெளியேற வழி செய்ய வேண்டும். செய்வார்களா ஆட்சியாளர்கள்
படங்கள் உதவி முஹமத் ஆரிப் 




Like this:
Like Loading...