விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவு
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடங்களை தயார் நிலையில் வைக்க சிறப்பு அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தற்போது மழை தீவிரமடைந்து உள்ள நிலையில், மழை சேதங்களை பார்வையிட்டு நிவாரண பணிகளை விரைவுபடுத்த விழுப்புரம் மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக உதயசந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். நேற்று காலை அவர், விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். கடலோரத்தில் கட்டப்பட்டு உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடங்களை பார்வையிட்டார்.
கோட்டக்குப்பம், பெரியமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், கீழ்ப்புத்துப்பட்டு, அனிச்சங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் ஆய்வு செய்தார். இந்த மையங்களை புயல் காலங்களில் திறந்து வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது வானூர், மரக்காணம் தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.