கோட்டகுப்பத்தை ரோனு புயல் புரட்டி போட்டது – roanu cyclone
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கோட்டகுப்பம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டி தீர்த்ததுடன் இன்றும் தொடர்கிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.பர்கத் நகர் பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.தொடர் மழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.