இஸ்லாமிய பொருளியல் கோட்பாடு, முதலாளித்துவம், பொதுவுடமை ஆகியவற்றிலிருந்து விலகி நிற்கும் மூன்றாவது பொருளாதார திட்டமாக பொருளாதார வல்லுநர்கள் பலரால் இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமிய பொருளாதார கொள்கை 14 நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானது என்றாலும் அதனை முஸ்லிம்களே கருத்தில் கொள்வதில்லை என்பார் அல்லாமா இக்பால். மார்க்சியம் முளைவிடுவதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தின் வேணவாவாக திகழ்ந்தது இஸ்லாமிய பொருளியல் கோட்பாடு. இஸ்லாத்தின் அடிப்படை கட்டாய கடமைகளில் ஒன்றான ஜக்காத் (ஏழைவரி) ஒன்றே இதற்கு போதுமான சான்று.
நவீன உலகின் மாறுபட்ட தரவுகளை வைத்து இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளை ஆராயமல், அவை வலியுறுத்தப்பட்ட காலகட்டத்தின் பின்புலத்திலும், அவை புறந்தள்ளப்பட்ட சூழல்களையும் கருத்தில் கொண்டு அணுக வேண்டியது இது. “செல்வம் உங்களில் வசதிபடைத்தவரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம்” என்பது திருக்குர்ஆனின் வாக்கு. இதனை ஊன்றி உணர்ந்து செயல்படுத்தியிருந்தால் சமத்துவ சமுதாயத்தை முஸ்லிம்கள் நிறுவியிருக்க முடியும்.
இஸ்லாம் வலியுறுத்தும் வட்டியில்லா வணிகமும் சுரண்டலில்லா சமூகமும் தோற்றம் பெறாதது யாருடைய குற்றம்? ஆக வேண்டிய காரியமும், போக வேண்டிய தூரமும் நிறைய இருக்கிறது. ஆயினும் அனைத்தும் முதல் அடியில் தான் தொடங்குகிறது எனும் அடிப்படையில் அஞ்சுமன், கூனிமேடு கீவா அமைப்புடன் இணைந்து முதல் அடியினை எடுத்து வைக்கிறது இஸ்லாமிய வங்கியினை அறிமுகம் செய்திட! சமுதாயம் சகல பயன்களையும் அடைந்திட!! அழைக்கிறோம் பயணத்தில் தாங்களும் இணைந்திட!
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.