சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பம் விநியோகம்


 

 சைனிக் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை சைக்னிக் பள்ளியில் 2016-17 கல்வி ஆண்டில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் மாணவர் சேர்க்க அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும் ஜன., 3ம் தேதி புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு- 642 102. என்ற முகவரியில் நவம்பர் மாதம் 30ம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம். 6ம் வகுப்பில் சேர 10 வயது முடிந்தும், 11 வயது முடியாமலும் அதாவது ஜூலை 2002 -லிருந்து 2003 ஜூலை 1ம் தேதிக்குள் பிறந்த மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒன்பதாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சைனிக் பள்ளியில் டிச., 4ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். தேர்வாகும் மாணவர் களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். மேலும் விபரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s