ஒளிராத தெரு விளக்குகள் இருண்ட கோட்டகுப்பம் சாலைகள்
சென்னை மற்றும் புதுவையை ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக கோட்டகுப்பம் மகாத்மா காந்தி ரோடு அமைந்துள்ளது. தினசரி இந்த சாலையை ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலையில் சுமார் 40 மின் விளக்கு கம்பம்கள் உள்ளது, இதில் 15 மட்டுமே வெளிச்சம் கொடுகிறது. மீதி உள்ள கம்பங்களில் ஒரு விளக்கு கூட எரியவில்லை. அதனால் இரவு 10 மணி வரை அந்த பகுதியில் உள்ள கடை வெளிச்சத்தில் மக்கள் சென்று வருகின்றனர். அதற்கு பிறகு அந்த பகுதி எப்போதுமே இருட்டாகவே காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகளுக்கும் பாத சாரிகளுக்கும் பெரும் அவதியாக உள்ளது. இதே நிலை தான் பழைய பட்டின பாதையில் 35 தெரு கம்பங்களில் சுமார் 10 இல் மின்விளக்கு எரிய வில்லை. இந்த இருட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே கோட்டகுப்பம் பேரூராட்சி அதிகாரிகளோ அல்லது மின்வாரிய அதிகரிகளோ, சம்பந்தப்பட்ட சாலையில் மின் விளக்குகளை எரிய செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.