கோட்டக்குப்பம் – புதுவை பகுதியில் அனைத்து சமுதாய மக்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு அஞ்சுமன் சங்கமம் என்கிற நிலையில் அஞ்சுமன் சார்பாக நேற்று 28.09.15 அன்று சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமயம் நடைபெற்ற சர்வசமய உரையாடலில் டாக்டர் இரத்தின சனார்த்தனன், பாஸ்டர் எட்வின், சகோ அப்துல் ஹமீது ஆகியோர் மதம் கடந்து மனிதர்கள் பேண வேண்டிய மானுடம் குறித்து உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு மௌலவி முஹம்மது எஹ்யா மன்பஈ தலைமை ஏற்றார் அஞ்சுமன் தலைவர் டாக்டர் ஷரீஃப் முன்னிலை வகித்தார்.அஞ்சுமன் சங்கமம் (27.09.15) நிகழ்வின் இரண்டாவது அமர்வில் இந்திய பன்மைச்சூழலின் இன்றைய நிலை குறித்த கலந்துரையாடலை தமிழ் தேசிய முன்னணியின் தோழர் ந.மு. தமிழ்மணி நடுவராக இருந்து நெறிப்படுத்தினார். தோழர்கள் சோ.பாலசுப்ரமணியன், இரா. மங்கையர்செல்வன், பொதினி வளவன், ம.இளங்கோ, மௌலவி பாதுஷா ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஒற்றை பண்பாட்டை நோக்கி இந்தியா நகர்வதை தோழர்கள் பல்வேறு கோணத்தில் எடுத்துரைத்த பாணி அவையினரை வெகுவாக கவர்ந்தது. இத்தகைய போக்குகளை எதிர்கொள்ள சனநாயக முற்போக்கு சக்திகளின் ஒருங்கிணைவு அனைத்து தோழர்களாலும் வலியுறுத்தப்பட்டது. அஞ்சுமன் விருந்து உபசரிப்புடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது..
Like this:
LikeLoading...
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.