கோட்டகுப்பம் Five ஸ்டார் நற்பணி மன்றத்தினர் பெரும் முயற்சினால் பல வருடங்களாக கோட்டக்குப்பத்தில் கூட்டு குர்பானி கொடுத்து வருவதை நீங்கள் அனைவரும் அறிந்ததே. அல்லாஹ்வில் அருளால் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் புதியவர்கள் நிறைய பேர் தங்கள் பெயரை பதிவு செய்து இருகிறார்கள். வழக்கம் போல் துபாய், சவுதி, போன்ற வளைகுடா நாட்டில் இருப்பவர்கள், மற்றும் ஐரோப்பா , அமெரிக்க, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருப்பவர்கள் நிறைய பேர் இணைந்து உள்ளனர், மேலும் பலர் இணைந்தால் ,நமதுரை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன் அடைவார்கள்.
மார்க்கம் சொன்னது போல் குர்பானி சட்ட கூறியது போல் இரண்டு வருடம் பூர்த்தியான புஷ்டியான மாடு மட்டுமே குர்பானிக்காக தேர்தேடுக்க படுகிறது, மேலும் அதை 3 நாட்கள் நன்கு பராமரித்து பின்னர் குர்பானி கொடுக்கபடும், அறுகபடும் மாடு முழுவதும் வெட்டப்பட்டு, குறிப்பாக தோலை தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் ஏழைக்காக பகிர்ந்து அளிகபடுகிறது. இதன் காரணமாகவே குர்பானி பங்கு தொகை கொஞ்சம் கூடுதலாக நிர்ணயிக்கபடுகிறது.
2015 வருடதுக்கான கூட்டு குர்பானி பங்குத்தொகை ரூ.2000
( இரண்டு ஆண்டு முழுமையாக பூர்த்தியான மாடு)
தாமதிக்காமல் உங்கள் கடமையை செய்து எல்லா வல்ல இறைவனிடம் பலனை அடைய விழைகிறோம். இதனை பயன்படுத்தி வெளிநாடு மற்றும்