கிழக்கு கடற்கரை சாலையின் சென்டர் மீடியன் ! அவலமாக இருப்பது அழகாக மாறுமா?
கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலை நடுவில் அமைந்துள்ள, ‘சென்டர் மீடியன்’ இயற்கை செடிகள் இல்லாமல் அவலட்சணமாகக் காட்சியளிக்கின்றன. ரோடு நடுவில் குப்பைகள் குவிந்து, பார்ப்பதற்கே படு அவலமாகக் காட்சியளிக்கிறது. இதனை பராமரிக்க ஒப்பந்தம் செய்த நிறுவனம் இந்த அவலத்தை பற்றி சிறிதும் கவலைப்படுவதேயில்லை.ஒப்பந்தத்தில் படி சென்டர் மீடியனில் செடிகள் வைத்து அவற்றை பராமரிக்கும் நிறுவனங்களே அதற்கு ஈடாக, அங்கு தங்களது நிறுவனத்தின் பெயர்ப் பலகையை அரசு கொடுத்துள்ள அளவீட்டின் படி, வைத்துக் கொள்ளலாம். ஆனால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு புல் பூண்டு கூட வைக்காமல், மேலும் அரசு அனுமதித்துள்ள அளவீட்டை மீறி அரை அடிகொரு ஷைன் போர்டு வைத்து வாகனம் ஓட்டும் பொது மக்களுக்கு இடைஞ்சல் உண்டாக்கி உள்ளனர். மேலும் கோட்டகுப்பம் ரவுண்டுட்டனாவில் வெறும் ஷைன் போர்டு மட்டுமே அதிகம் உள்ளது. கோட்டகுப்பம் பேரூராட்சி அல்லது தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உடனே செயல் பட்டு, அதிகமா உள்ள ஷைன் போர்டுகளை அகற்றி, அந்த நிறுவனம் ஒப்பந்தத்தின் படி செடிகள் வைத்து பராமரிக்க நிர்மந்திக்க வேண்டும். மீறினால் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு நகரின் நலனில் அக்கறையுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது சமூக அக்கறையுள்ள பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குச் சொந்தமான இந்த சாலையின் பராமரிப்பு, அத்துறைக்கே உள்ளது. நல்ல எண்ணம் கொண்ட நிறுவனங்களைத் தேர்வு செய்து, இந்த ‘சென்டர் மீடியன்’ பராமரிப்பை ஒப்படைக்கலாம் என்ற கருத்து, பல தரப்பினராலும் முன் வைக்கப்படுகிறது. அப்படிச் செய்தால் மட்டுமே, இந்த ‘சென்டர் மீடியன்’ மீண்டும் அழகு பெறும் வாய்ப்புள்ளது.
மேலை நாடுகளில், ‘சென்டர் மீடியன்’ களில், கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை வெகுவாக உறிஞ்சும் கொடித்தாவரங்கள், சிறுசிறு பூக்கள் பூக்கும் செடிகளை நடுகின்றனர். அவை, வாகனம் ஓட்டுவோர்க்கு இருக்கும் பதட்டத்தைக் குறைப்பதுடன், மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற முயற்சிகளை நம்மூரில் மேற்கொள்வது, காலத்தின் கட்டாயம். இது, அதிகரித்து வரும் விபத்தைக் குறைக்க சிறிதேனும் உதவக்கூடும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
WELDON GOOD QUESTING,,,,, COGRADS
LikeLike