கோட்டகுப்பம் குயீன் மேரி பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
கோட்டகுப்பம் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளித் தாளாளர் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (50). இவர் கோட்டகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அப்பள்ளி முதல்வராகவும் உள்ளார். இவர், பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம். இந் நிலையில் சனிக்கிழமை சிறப்பு வகுப்புக்காக மாலையில் மாணவ, மாணவிகள் பள்ளியில் இருக்கும்போது, இச் சிறுமியை மட்டும் தனது அறைக்கு அழைத்துச் சென்ற சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த சிறுமி சோர்வாக காணப்பட்டார். அவர் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். அவரது தாய் அச் சிறுமியிடம் விசாரிக்கும்போது பள்ளி நிர்வாகி நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார்.பின்னர், இதுகுறித்து கோட்டகுப்பம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மகளிர் போலீஸார் சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச் சம்பவம் பற்றி அறிந்த சிலர் கோட்டகுப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப் பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
[…] மேலும், இந்த சிறுமி, இவரது வீட்டின் அருகே உள்ள குயீன் மேரி பள்ளியில் டியுஷன் படித்துள்ளார். கடந்த 21.6.15-ஆம் தேதி, வழக்கம் போல், டியூஷன் போனபோது, அப்பள்ளியின் தாளாளரான, புதுவை லாஸ்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த சிவக்குமார்(50), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பழைய செய்தியை பார்க்க இங்கே அழுத்தவு… […]
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
[…] மேலும், இந்த சிறுமி, இவரது வீட்டின் அருகே உள்ள குயீன் மேரி பள்ளியில் டியுஷன் படித்துள்ளார். கடந்த 21.6.15-ஆம் தேதி, வழக்கம் போல், டியூஷன் போனபோது, அப்பள்ளியின் தாளாளரான, புதுவை லாஸ்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த சிவக்குமார்(50), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பழைய செய்தியை பார்க்க இங்கே அழுத்தவு… […]
LikeLike