கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). இவர், மெயின் ரோட்டில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார்.மேலும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் மற்றும் உதிரி பாகங்களையும் விற்று வந்தார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும் சுப்பிரமணியன் செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை வழக்கம் போல் சுப்பிரமணியன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 20 செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள் மற்றும் விற்பனை பணம் ரூ. 3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு கடையே காலியாக கிடந்ததை பார்த்து திடுக்கிட்டார்.
யாரோ மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் – ரீசார்ஜ் கார்டுகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன செல்போன் மற்றும் ரீசார்ஜ் கார்டுகளின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து சுப்பிரமணியன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
NANDRI: MALAI MALAR
nAN