அஞ்சுமன் அறிவு மையம் 13.6.2015 அன்று நடத்திய
கல்வி எழுச்சி கருத்தரங்கு..
புகைப்படம் நன்றி : ஜனாப் .ரியாஸ் அஹ்மத்
கருத்து நன்றி : ஜனாப் . லியாகத் அலி
உயர்கல்வி விழிப்புணர்வை உருவாக்க அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரீஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் –
உயற்கல்வியில் சிறுபான்மையினருக்கு கொட்டி கிடக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்த தவறும் சலுகைகளையும் கவனம் செலுத்த வேண்டிய துறைகளையும் பட்டியலிட்டு சென்னை ஐக்கிய நல்வாழ்வு அமைப்பு (UNWO) வழங்கிய காணொளி விளக்கப்படம் மாணவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமைந்தது.
நிகழ்ச்சியில் “அறம் காக்கும் கருவி” எனும் தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் கல்வியில் ஏற்றத்தாழ்வுகளும் அதனை எதிர்கொள்ள தேவையான விசாலப்பார்வை குறித்தும் அழகுற எடுத்துரைத்தார்.
“உயர..உயர..படி” எனும் தலைப்பில் பேசிய ஆசிரியர் தையல்நாயகி மாணவர்கள் மன அழுத்தத்தை நீக்கி விருப்பத்துடன் கல்வி கற்கும் உபாயங்களை எடுத்துரைத்தார்.
மேலும் அமெரிக்க பல்கலையின் ஆய்வு மாணவி ஷமீரா ஜுனைத், சுமிஜியா கல்வி குழுமத்தின் நிறுவனர் முஹம்மது ஜியாவுதீன், மற்றும் கல்வியாளர்கள் பயனுள்ள பல செய்திகளை மாணவர்களிடம் பதிவு செய்தனர்.
எதிர்பார்த்த அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டாதது பெருங்குறை. இலவசங்களையும் வெற்று மாயைகளை மட்டும் துரத்தும் மனோபாவம் மாணவர்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது கவலைக்குரியது..