கோட்டகுப்பம் தைக்கால் தெருவில் உள்ள சகாபுதீன் அவர்களின் மாளிகை கடையில் திடீர் என்று தீ பிடித்து எரிந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் தீ அணைப்பு துறையினர் வானூரில் இருந்து வந்தனர். அவர்கள் வரும் முன்னரே கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய். மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவின் முலமாக தீ பரவியதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. கோட்டகுப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
நமது கோட்டக்குப்பத்தில் இருந்து பல கிலோமிட்டர் தூரம் உள்ளது வானூர். நமதூரில் அசம்பாவிதம் நடைபெறும் போது இவர்கள் இங்கே வரும் நேரத்தில் அனைத்தும் முடிந்து விடுகிறது. இதற்கான ஒரே தீர்வு புதுவை தீ அணைப்பு நிலையத்தில் இருந்து வரும் வரையில் சட்டம் வர வேண்டும் இல்லை என்றால் நமதுருக்கு அருகே ஒரு தீ அணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். செய்வார்களா நமது ஆட்சியாளர்கள் …..
மேற்படி தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டது அல்ல. மின்சார ஒயர்களோ அல்லது உபகரணங்களோ எதுவும் தீ பற்றவில்லை. மின்சார விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. தீ மின்சாரத்தினால் ஏற்பட்டிருந்தால் பெரும் நாசம் விளைந்திருக்கும். மண்ணெண்ணெய். சமையல் எண்ணெய் ஆகியவை தீப்பற்றி கற்பனை செய்ய முடியாத சேதம் ஏற்பட்டிருக்கும். கம்பிரசர்கள் வெடித்து இருக்கும். இறைவன் காப்பாற்றினான். இது எனது கட்டிடம் என்பதை அறியத்தருகிறேன். லியாகத் கலீம்
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
மேற்படி தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டது அல்ல. மின்சார ஒயர்களோ அல்லது உபகரணங்களோ எதுவும் தீ பற்றவில்லை. மின்சார விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. தீ மின்சாரத்தினால் ஏற்பட்டிருந்தால் பெரும் நாசம் விளைந்திருக்கும். மண்ணெண்ணெய். சமையல் எண்ணெய் ஆகியவை தீப்பற்றி கற்பனை செய்ய முடியாத சேதம் ஏற்பட்டிருக்கும். கம்பிரசர்கள் வெடித்து இருக்கும். இறைவன் காப்பாற்றினான். இது எனது கட்டிடம் என்பதை அறியத்தருகிறேன். லியாகத் கலீம்
LikeLike
eathu unmai
LikeLike