இருளில் தவிக்கும் கோட்டகுப்பம் பேருந்து நிலைய வளாகம்
கோட்டக்குப்பம் பேருந்து நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைமாஸ் விளக்கு பொருத்தப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பேரூராட்சி அலுவலகம், காவல்நிலையம், மகளிர் காவல்நிலையம், மீன் விற்பனை நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இப்பகுதி எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ஹைமாஸ் விளக்கு எரிய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply