(குர்பானி கொடுக்கும் புகைப்படங்கள் பிற சமூக மக்களின் பார்வையில் மிரட்சியோடும், சங்கடத்தோடும் பார்க்கப்படும் சூழல் நிலவுகிறது. அதனை தவிர்க்கும் வகையில் புகைப்படம் பதியவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்)
குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
அல் குர்ஆன் 22:37
இந்த வருடமும் பைவ் ஸ்டார் நற்பணி மன்றம் மற்றும் கிஸ்வா உறுப்பினர்கள் ஆதரவில் சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளை சேர்த்தவர்கள் சார்பாக கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டது. 06-10-2014 அன்று 9 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 380 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது……
மாட்டு தோலில் மூலம் கிடைத்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் நிவாரண நிதிக்கு கொடுக்கபட்டது.