கோட்டக்குப்பத்தில் இன்று 29/07/2014 வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடபட்டது. முன்னதாக அணைத்து ஜமாஅத் தார்களும் ஜாமியா மஸ்ஜிதில் இருந்து ஊர்வலமாக ஈத்கா நோக்கி சென்று மௌலவி V A முஹமது எய்ஹா மன்பஈ பெருநாள் பயான் செய்தார்கள். ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி Y இசனுல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்கள். மௌலவி அப்துல் ஹக் ஹஜ்ரத் பெருநாள் தொழுகை நடத்தினார்கள். மௌலவி ஹாஜி காஜி தமீமுல் அன்சாரி அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்தினார்கள். மௌலவி ஹபிழ் அப்துல் காதிர் ஹஜ்ரத் அவர்கள் உலக முஸ்லிம்கள் அமைதிக்காக துவா செய்தார்கள். பின்னர் அனைவரும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். சிறவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply