நமதூர் கோட்டக்குப்பம் தேர்வு நிலை பேரூராட்சி என்ற நிலை எட்டிய பிறகும் பொது மக்களுக்கு குறைந்த பட்ச அடிப்படை வசதி கூட கிடைப்பது இல்லை.
பல ஆண்டுகளாக கோட்டகுப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு (கோயில் மேடு) மற்றும் கோட்டகுப்பம் பேருந்து நிலையம் பகுதியில் நிழல் குடை அமைக்க வில்லை.
இதனால் பொதுமக்களும், பணிக்குச் செல்ல வேண்டியவர்கள் , கல்லூரி மாணவ, மாணவிகளும் கிழக்கு கடற்கரை சாலையோரத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் அப்பகுதியில் எங்கும் ஒதுக்க முடியாது. எனவே, நிழல்குடை அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை பல முறை விடப்பட்டும் ஆட்சியர்கள் காதில் விழாமல் உள்ளது.
அதே நேரத்தில் கோட்டகுப்பம் தேவி தியேட்டர் அருகே கட்டி முடிக்க பட்ட நிழல் குடை பராமரிப்பு இல்லாமல் வினாகி வருகிறது. சாக்கடை மற்றும் புதார் முளைத்து அதன் அருகே பொதுமக்கள் ஒதுங்க கூட பயப்படும் அளவில் உள்ளது. இங்கே நிழல் குடை இருந்தும் அதைப் பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை.
கோட்டக்குப்பத்தில் ஒரு இடத்தில் நிழல் குடைக்காக பொதுமக்கள் ஏங்கும் அதே வேலையில் மறுபுறம் இருக்கும் நிழல் குடையை பராமரிக்காமல் இருக்கும் அவல நிலை உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சட்டமன்ற உறுபினர் தொகுதி மேம்பாடு திட்டத்தில் அல்லது பாராளுமன்ற உறுபினர் தொகுதி மேம்பாடு திட்டத்திலாவது கோயில் மேடு மற்றும் பேருந்து நிலையம் அருகே நிழல் குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேவி தியேட்டர் அருகே உள்ள நிழல் குடையை புதுப்பித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு விட வேண்டுகிறோம்.
கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகமே செய்வீர்களா ……..
[…] செய்தியை பார்க்க இதை அழுத்தவும் […]
LikeLike