நன்றி செய்தி மற்றும் புகைப்படம் உதவி : ரியாஸ்
02-03-2014 ஞாயிறு அன்று விழுப்புரம் (வடக்கு) மாவட்டம் கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க, MTS மற்றும் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனை சார்பாக இருதய நோய், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான இலவச மருத்துவ முகாம் நடத்தபட்டது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 250 ற்க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று பயன் அடைந்தனர். த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை நகர த.மு.மு.க மற்றும் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் கோட்டக்குப்பம் பர்கத் நகர் கிளையில் ம.ம.க கொடி மற்றும் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பாக MTS கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது த.மு.மு.க மாவட்ட செயலாளர் J.அபூபக்கர் அஜ்மல், MTS மாவட்ட செயலாளர் Y. யாசின், நகர தலைவர் A.நிஜாம், நகர மருத்துவ அணி செயலாளர் A.சிராஜுதீன் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.