மாலத்தீவு–லட்சத்தீவு இடையே வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டக்குப்பத்தில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது.
அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை தூறியது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் கோட்டக்குப்பம் சுற்றுபுறத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது.