கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் அநியாயங்களை தடுக்கக் கோரியும் தைக்கால் அருகில் உள்ள கடை எண் 1-ல் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளதால் அதை இரண்டாக பிரிக்கக்கோரியும் வானூர் வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் 11/2/14 செவ்வாய் அன்று மதியம் 3மணியளவில்கோட்டக்குப்பம் தவ்ஹிது ஜமாத் நிர்வாகிகள் வட்ட வழங்கள் அதிகாரி (TSO) திரு. ஜெயச்சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி மனு அளித்தனர். இதற்க்கிடையே 12.2.14 அன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட தலைவர் I.ஷாகுல் தலைமையில் நகர நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது அதில் ரேஷன் கடைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அதற்கு துணைபோகும் TSO, DSO, CSR ஆகியோர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22.2.2014 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோட்டக்குப்பம் பேரூராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற இருக்கிறது.