வக்ஃபு வாரிய சொத்துகளை ஆக்கிரமிப்போருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா, மாநிலங்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
வக்ஃபு வாரிய சொத்துகளை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துவோருக்கு சட்ட ரீதியானக தண்டனை வழங்கும் விதமாக விரைவான நடவடிக்கையை மேற்கொள்வற்கு இந்த வக்ஃபு சொத்து மசோதா வகை செய்கிறது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேறினால், வக்ஃபு சொத்து தொடர்பாக எந்தவித வழக்கு மற்றும் நடவடிக்கைக்கு உரிமையியல் (சிவில்) நீதிமன்றத்தை நாட முடியாது.
வக்ஃபு வாரிய சொத்துகளை யாரும் ஆக்கிரமித்தால், அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வக்ஃபு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்றவும், சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றவும், அவற்றை இடித்துத் தள்ளவும் உத்தரவிட வக்ஃபு சொத்து நிர்வாக அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
vakbu sothukalai eithunaal varai anubavithuvarum muslim peariya manithan poorvaiyal valam varum karungkaaligal eintha sattathin mulam thanndanai adaiyaveandum
LikeLike