
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருபெயரால்…
அன்பிற்கினிய வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் சகோதரர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்….
கடந்த அக்டோபர் மாதம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர் நகரில் பாஜக வால் வெறியூட்டப்பட்டு அங்கு சகோதரர்களாக வாழ்ந்துவந்த முஸ்லிம் – ஜாட் இன மக்களிடையே இன கலவரத்தை நிகழ்த்தி அவர்களிடையே பிளவை ஏற்படுதியுள்ளது. இதில் 100 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 50,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க்கபட்டனர்.
இந்த வெறிச்செயலை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வளர்கள், சமுதாய அமைப்புகள் பாதிக்கப்பட முஸ்லிம்களுக்கு ஆதரவாக களமாடினர். தமிழகத்தில் த.மு.மு.க. அனைத்து மாவட்டத்திலும் பாதிக்கப்பட முஸ்லிம்களுக்கு உ.பி அரசு உரிய நிவாரணம் வழங்க கோரியும், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தி தமிழகத்திலிருந்து முதலாவதாக ஆதரவு கரம் நீட்டியது.
பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதிய நிலை :
மாதங்கள் பல கடந்த நிலையில், இன்று அங்கு 58 அகதிகள் முகாம்களில் உள்ள 51,000 முஸ்லிம் மக்களின் நிலைமை மோசமாகி உள்ளது. உ.பி அரசாங்கத்தின் நிவாரணம் நிறுத்தபட்டுள்ளது. இன்றுவரை அவர்கள், தங்களின் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி, அவர்களின் சொத்துக்களை மீட்டெடுத்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உ.பி அகிலேஷ் யாதவ் அரசு மறுத்துவிட்டு தொடர்ந்து அம்மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இந்த நிலையில் அங்கு கடும் குளிரை தாங்க முடியாமல் 50ற்க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துவிட்டன. இந்த சோகமான சூழ்நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவ், தனது சொந்த ஊரான சாய்பாய் கிராமத்தில் ரூ.20 கோடி செலவில் பாலிவுட் நட்சத்திர கலை நிகழ்ச்சியை நடத்தி உற்சாகமாக கண்டுகளிதுள்ளார். பத்திரிக்கைகள் பலவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் துயரை திரையிட்டு காட்ட மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மக்கள் நம்பி இருப்பது சமுதாய அக்கறைகொண்ட, மனிதநேயம் மிக்க, துய்மையான, வீரியமிக்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்து போராடும் வலிமைமிக்க அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் மற்றும் நேர்மையான – துணிவான பத்திரிக்கையாளர்களை மட்டுமே.
தமிழகம் முழுவதும் த.மு.மு.க. நிதி திரட்டுகிறது:
பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் நிதிதிரட்டித் தருமாறு த.மு.மு.க. வுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டோகோளை ஏற்று அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் மக்களிடம் நிதி திரட்ட த.மு.மு.க. தலைமை உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் த.மு.மு.க. மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக பள்ளிகளில் ஜும்மா வசூல், வீடு வீடாக மக்களை சந்தித்து வசூல், வியாபாரிகளிடம் வசூல், தனிநபர் வசூல் என பம்பரமாக சுழன்று அம்மக்களுக்காக வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
-முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் த.மு.மு.க. சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
-இரண்டாம் கட்டமாக தொடர்ந்து அம்மக்களின் நிலையை விளக்கி த.மு.மு.க. வின் அதிகாரபூர்வ வார இதழான மக்கள் உரிமை யில் எழுதி சமூக ஆர்வலர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
-மூன்றாம் கட்டமாக பாதிக்கப்பட்ட அம்மக்களுக்காக தமிழகம் முழுவதும் நிதி திரட்டுகிறது.
முஸாபர் நகர் மக்களுக்குகாக கோட்டக்குப்பத்தில் நிதி வசூல்:
இதனை தொடர்ந்து கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க. சார்பாக பத்திரிக்கை முறையில் அம்மக்களின் தற்போதிய நிலையை விளக்கி புகைப்படத்துடன் கூடிய கட்டுரையையும், சமுதாய உறவுகளுக்கான த.மு.மு.க. தலைவரின் கடிதமும் கொண்ட பத்திரிக்கை பிரசுரத்தை கடந்த வெள்ளிக்கிழமை(10.01.14) கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் பள்ளி, புஸ்தானிய பள்ளி, இந்திரா நகர் பள்ளி, சின்ன கோட்டக்குப்பம் பள்ளி, ரஹமத் நகர் பள்ளி, மரைக்கார் தெரு மற்றும் மக்கா மஸ்ஜித் பள்ளிகளில் விநியோகித்து நிதி வசூல் செய்யப்பட்டது. அதனை இரண்டாம் நாளாக சனிக்கிழமை (11.01.14) சேகர் கடை, கோயில்மேடு, பஸ்தானிய பள்ளி வியாபார பகுதிகளிலும், ரஹமத் நகர், ஹாஜி ஹுசைன் தெரு, மோர்சார் தெரு, குட்டவாப்பு தெரு, நாட்டாமை தெருகளில் வீடு வீடாக வசூல் செய்யப்பட்டது. மூன்றாம் நாளான ஞாயிறு (12.01.14) அன்று பர்கத் நகர், குண்டு கிராமம், மரைகாயர் வீதி 1&2, குயவர் வீதி 1&2, உமர் புலவர் தெரு, பஜார் வீதி, மாமுலப்பை தெரு த.மு.மு.க. சகோதரர்கள் வசூல் செய்தனர். எங்களை எதிரிகளாக நினைக்கும் இயக்கத்தின் சதிகளை மீறி கோட்டக்குப்பம் மக்கள் தந்த ஆதரவு எங்கள் களப்பணியை வீரியம் பெற வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி அளிப்பீர்:
நான்காம் நாள் திங்கள் (13.01.14) முதல் தனிநபர் வசூல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டக்குப்பம் வெளிநாடு வாழ் சகோதரர்களிடமும் முஸாபர் நகர் மக்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு. அதன் அடிப்படையில் இக்கடிதம் வாயிலாக உங்களை சந்தித்து அம்மக்களுக்காக கரம் ஏந்துகிறோம். தாங்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை பதிக்கப்பட்ட மக்களுக்காக அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறோம்.
கோட்டக்குப்பம் த.மு.மு.க. வின் சேவைகள் :
தொடர்ந்து கோட்டக்குப்பத்தில் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாமலும், விலைபோகமலும் சமுதாய நலனில் அக்கறைகொண்டு அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து சமரசம்மின்றி களமாடிவருகிறோம். பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் சமீப காலங்களில் மட்டும் கோட்டக்குப்பம் மக்களின் நலன் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளை கையிலெடுத்து போராடிவருகிறோம். பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறோம். சேவை நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். ஜகாத் மற்றும் பித்ரா வசூலித்து உரியவர்களுக்கு வழங்கி வருகிறோம். குர்பான் தோல் வசூலித்து அந்த நிதியை கல்வி, மருத்துவம் மற்றும் ஏழைகளுக்கு வழங்கி வருகிறோம். தொடர்ச்சியாக இரத்த தானம் செய்து வருகிறோம். இவை அனைத்தும் எந்தவித லாபத்திற்காகவும் அல்ல, மறுமையின் கூலியை மட்டுமே இலக்காக வைத்து இக்லாசோடு பணி செய்துவருகிறோம். அவதூறு பரப்பியும், ஆதாரமற்ற குற்றசாட்டுகளை விமர்சணங்களாக பலர் வைத்தாலும் அதை பற்றி கவலைகொள்ளாமல், நம்மை படைத்த ரப்பிலாலமீன் எங்களின் துய பணியை அறிவான், ஒரு நாள் அதை விமர்சிபவர்கள் அனைவருக்கும் உண்மையை உணர்த்துவான் என்ற நம்பிக்கையில் எங்கள் பயணத்தை இன்ஷா அல்லா… இறுதிநாள் வரை தொடர்வோம்.
அனைவருக்கும் நன்றி:
தொடர்ந்து எங்களின் ஒவ்வொரு முயற்ச்சிக்கும், போரட்டத்திற்கும் ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம். தொடர்ந்து உங்களின் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.
இறைவனிடம் துவா செய்யுங்கள்:
உங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான், உங்களுக்காகவும், சமுதய நலனிற்காகவும் உழைக்கும் எங்களுக்காகவும் எங்களின் குடும்பதார்களுக்காகவும், த.மு.மு.க. வை இன்னும் பலப்படுத்தவும் இறைவனிடம் துவா செய்யுங்கள்.
உங்கள் உழியன்,
த.மு.மு.க.,
கோட்டகுப்பம் நகரம்.
கோட்டக்குப்பத்தில் நிதி அளிக்க…
அபுதாகிர்
நகர பொருளாளர்
அலைபேசி : +91 97877 44783
வங்கி கணக்கு எண்:
ABUTHAHIR.A
IOB
100ft ROAD BRANCH
S/B
A/C : 197601000000760
IFSC CODE : IOBA0001976
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தவ்ஹீத் ஜமாத்தினர் வசூலித்தால் எவ்வளவு வரவு செலவு என சமர்ப்பிக்கின்றனர். ஆனால் த.மு.மு.க சமர்ப்பித்ததாக தெரியவில்லை! இதையாவது tmmk தலைமை கணக்குகளை சமர்ப்பிக்குமா?
LikeLike
த.மு.மு.க கடந்த சுனாமியின்போதும் வசூல் செய்தது ஆனால் அவர்களின் தலைமை அதன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை! அதுபோன்ற ஒன்றாக இந்த கணக்குகலையும் சமர்ப்பிக்காது என நினைக்கிறேன் அல்லாஹ்வை அஞ்சி செயல்படட்டும்
LikeLike
முசாபர் நகருக்கு வசூல் செய்கிரோம் என்ற பெயரில் ஊரை ஏமாற்ற நினைக்கும் இவர்களுக்கு உங்கள் ஆதரவா? சிந்தித்து ஆலோசித்து கருத்து கேட்க்கும் நீங்கள் ஏன் இவர்கள் ஏமாற்றுவது புரியவில்லை! அபுதாஹிர் a/c தான் முசாபர் நகருக்கு போகுமோ? ஏன் மக்கள் பனத்தை ஏமாற்றுகின்றீர்கள்
LikeLike
idhallam seriousa eduthikaathinga bro. summa jolly ki thaan
LikeLike