கோட்டக்குப்பத்தில் 24/11/2013 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் மேல்சிகிச்சைகாக சென்றவர்களில்…
-
11 பேர்களுக்கு சிறு அறுவை சிகிச்சை நல்ல விதத்தில் செயப்பட்டது.
-
மேலும் 9 பேர்களுக்கு வருகின்ற 9 டிசம்பர் அன்று பெரிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
-
இதய நோயால் பாதிக்க பட்ட 7 வயது பெண்ணுக்கு தெரபி சிகிச்சை தரபடுகிறது. இது பயனளிக்க வில்லை என்றால் இதய அறுவை சிகிச்சை செயப்படும்.
-
நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்க பட்ட 23 வயது பெண்ணுக்கு இந்த மருத்துவ மனையில் வசதி இல்லாததால் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு பரிந்துரைக்க பட்டு இருக்கிறார். சென்னைக்கு சென்ற அவரை பரிசோதித்து சில மருந்துகள் கொடுத்து அடுத்த வாரம் வர சொல்லி இருகிறார்கள்.
இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தி முடிந்தவுடன் தனது பணியை நிறைவு செய்யாமல் கடைசி வரை அவர்களுடன் கிஸ்வா சங்க நிர்வாகிகள் உடன் இருந்து சேவை செய்து வருகிறார்கள்.
அனைவருக்கும் சிகிச்சை நல்ல முறையில் முடிந்து விடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிராதிப்போம்,