கோட்டகுப்பம் தைக்கால் திடலில் அமைத்துள்ள முஸ்லிம் அரசு பள்ளியில் குழந்தைகள் தினவிழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு கிஸ்வா சார்பில் பரிசு பொருட்கள் வழங்க பட்டது .
முன்னதாக நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியா ளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், கவுன்சிலர் ரமீனாபேகம், முகமது பாரூக்,முகமது சாதிக், சலீம்,முபாரக்,முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண் டனர். குழந்தைகளுக்காக மாறுவேட போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கிஸ்வா சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் தினம் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர் பேசினர். பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
Happy my wishas childreans day
LikeLike