தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை சார்பில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 10/11/2013 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் நகர தலைவர் M.I சகாபுதீன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொது செயலாளர் R. கோவை ரஹமத்துல்லாஹ், மாநில துணை பொது செயலாளர் M. முஹம்மது யூசுப் மற்றும் கோட்டக்குப்பம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் M.G முஹம்மது அலி ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள். இப்பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் இருக்கும் 3.5% இடஒதுக்கீட்டை 7% அதிகப்படுத்திடவும் மத்தியில் 10% இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தியும் வருகின்ற ஜனவரி 28 அன்று சென்னையில் நடைபெரும் சிறை செல்லும் போராட்டத்தில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவது உட்பட மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜக்காத் மற்றும் குர்பானி தோல் கொண்டு திரட்டப்பட்ட நிதியை கொண்டு, ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் , க்ரைன்டர்(Grinder), சைக்கிள் & டீ கேண் , தட்டு வண்டி, Tricycle போன்றவைகள் நல திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. இப்பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
News and Photo credit : TNTJ Kottakuppam.