கோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் பிளாஸ்டிக் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித் தும் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது.கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள், டீ கப்புகள், தெர்மாகூல் பிளேட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் சாக்கடை கழிவுநீர் சீராக செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது.இதனையடுத்து பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் கடந்த 16.07.2012 தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் தடை செய்து தீர்மானம் (தீர்மானம் எண்.142) நிறைவேற்றப் பட்டது.அதன்படி பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மறுசுழற் சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், டம்ளர், மேஜை விரிப்பு, தெர்மா கூல் பிளேட்டுகள் ஆகியவை விற்பதற்கும், உபயோகப்படுத்துவதை 14.09.2012ம் தேதிக்குள் நிறுத்திகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் கால அவகாசத் திற்குப் பின் விற்பனை செய்யும் பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும், மீறி விற்பவர்களுக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிப்பது என பேரூராட்சி அறிவித்தது.ஆனால் அறிவிப்பிற்குப் பின் பெயரளவிற்கு பள்ளி மாணவ, மாணவர்களை அழைத்து விழிப்புணர்வு ஊர்வலம் மட்டும் நடத்தினர். பின்னர் பிளாஸ்டிக் விற்பனை நடைபெறுகிறதா? தொடர்ந்து உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டு கொள்ளவில்லை.இதனால் கோட்டக்குப்பம் நகரில் கடைகள், டீ கடை, ஓட்டல்கள், இரவு நேர தள்ளுவண்டி கடைகள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தண்ணீர்,டீ கப், தெர்மாகூல் பிளேட்டுகள், பிளாஸ் டிக் கவர் உபயோகம் மீண்டும் அதிகரித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வதாக கூறி கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி விளம்பரம் உள்ளிட்ட செலவுகளை செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை தான் பேரூராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் வீணடித்து வருகின்றனர். நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply