கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கம் ( KISWA) ஆரம்பித்த நோக்கம் வெகு வேகமாக நிறைவேறி வருகிறது. வாரம் தோறும் இளைஞர்கள் ஆர்வமாக பொது சேவையில் தங்களை ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பல மாதங்களாக கோட்டகுப்பம் பழைய பட்டின பாதை மற்றும் ஆசாத் தெருவில் இருக்கும் பள்ளம் பொது மக்களை பயம் கொள்ள வைத்து வந்தது. அதை கருத்தில் கொண்டு இன்று கிஸ்வா உறுப்பினர்கள் தற்காலிக ஏற்பாடாக அந்த பள்ளத்துக்கு ஒரு மூடி ஏற்பாடு பண்ணி அந்த பள்ளத்தை மூடினார்கள். இதை கண்ட இந்த வார்டின் பேரூராட்சி உறுப்பினர் அவர் பங்குக்கு அவரால் ஆன அணைத்து உதவிகளும் செய்தார்கள். மேலும் இந்த பள்ளத்துக்கு வெகு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று நமக்கு வாக்குறுதி அளித்தார்கள்.
கிஸ்வா உறுபினர்களுக்கு உதவி செய்த கோட்டகுப்பம் பேரூராட்சி உறுப்பினர் நஜிர் அவர்களின் மகனும் 9 வது வார்டு உறுப்பினரின் கணவருமான ஜனாப். இலியாஸ் அவர்களுக்கு கிஸ்வா உறுபினர்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் கிஸ்வா வின் செயற்குழு வரும் மே மாதம் ஒன்றாம் தேதி நடக்க இருப்பதை இதன் முலம் பொது மக்களுக்கு அறிய தருகிறோம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply