KISWA – கோட்டகுப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் தொடக்கம்
கோட்டக்குப்பம் பொது நல சங்கம் (KISWA) என்ற புதிய அமைப்பு 07/04/2013 ஞாயிறு முதல் செயல்பட தொடங்கியது. பல வாரங்களாக மக்களிடம் நடைபெற்ற விவாதத்தை அடுத்து இந்த அமைப்பு உருவெடுத்துள்ளது. கோட்டக்குப்பத்தில் உள்ள அணைத்து தெரு மற்றும் அருகில் உள்ள துணை நகரின் பிரதிநிதிகள் இதில் உறுப்பினராக உள்ளனர். மேலும் தெருவில் உள்ள அனைவரும் இதில் உறுபினராக இணைய படிவங்கள் வழங்கப்பட்டது.
இந்த அமைப்பை பதிவு செய்து கோட்டக்குப்பத்தில் ஒரு அடையாளமாக நிலை நிறுத்த அனைவரும் உறுதி பூண்டுள்ளனர். மேலும் உடனடி நடவடிக்கையாக கோட்டக்குப்பத்தில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரை ஓரத்தில் மது அருந்த கூடாது என்று எச்சரிக்கை பலகை அங்கங்கே வைக்கபட்டது.
இந்த அமைப்பில் மேலும் பலர் சேர்த்து நமதூரில் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் இனி நடக்க வண்ணம் தடுக்க அனைவரும் ஒன்று சேர்வோம். உங்கள் ஆலோசனைகளை யாவும் வரவேற்கபடுகிறது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
இந்த அமைப்பில் என்னையும் இணைத்து கொள்ள விரும்புகிறேன் யாரை அணுகவேண்டும்
LikeLike
Contact Malik @ 919790968698
LikeLike