இன்று (16.3.13) கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஓர் கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் முடிவில் கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து நடந்து வரும் சம்பவத்துக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில், இனி வரும் காலங்களில் இதுபோல் பொது பிரச்சனைகளுக்கு பொதுமக்களை காக்கும் வகையில் 15 நபர் கொண்ட குழு அமைத்து செயல் பட உள்ளது (மாஷா அல்லாஹ்). இந்த அணியில் கோட்டகுப்பத்தை சேர்ந்த அனைத்து அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள், இஸ்லாமியா இயக்கத்தினர், சமூக சேவை இயக்கத்தினர் மற்றும் ஜாமியா மஸ்ஜித் சேர்த்த நிர்வாகிகளும் ஒன்றினைந்த அணியாக செயல்படும். இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில் ஊரில் நடக்கும் அசம்பாவிதங்களை இந்த அணி கண்காணித்து துனிந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்கும்.
இன்று (16.3.13) மாலை 15 பேர் கொண்ட குழுக்காண பட்டியல் வெளியடப்படும்.