மோட்டார் இன்ஷூரன்ஸ்: எப்படி பிரீமியத்தைக் குறைக்கலாம்?


நிறைய பணம் தந்துதான் கார், மோட்டார் பைக் வாங்குகிறோம். வாகனம் திருடு போகாமல் இருப்பதற்கான  கருவிகளையும் பொருத்திவிட்டோம். இதற்குமேலும் அதிக பிரீமியம் தந்து இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டுமா என பலரும் யோசிக்கிறார்கள். நம்மிடம் இருக்கும் வாகனங்களுக்கான பிரீமியம் செலவை எப்படி எல்லாம் குறைக்கலாம் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை துணைத் தலைவர் கே.என்.முரளி.

 

”வாகனம் வைத்திருக்கும் அனை வரும் கட்டாயமாக வாகன இன்ஷூரன்ஸ் வைத்திருக்கவேண்டும் என்பது நம் நாட்டுச் சட்டம். இதில் வோன் டேமேஜ் இன்ஷூரன்ஸ், மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் என உள்ளன. மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ்   கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

 

நோ க்ளைம் போனஸ்!

 

நோ க்ளைம் போனஸ் என்பது எந்த இழப்பீடும் கேட்காதவர்களுக்கு பிரீமியத்தில் தரும் தள்ளுபடியாகும். முதல் ஆண்டு க்ளைம் செய்யவில்லை எனில், உங்களின் ஆண்டு பிரீமியத்தில் 20%, இரண்டாம் ஆண்டு 25%, மூன்றாம் ஆண்டு 35%, நான்காம் ஆண்டு 45 %, ஐந்தாம் ஆண்டு 50 சதவிகிதமும் நோ க்ளைம் போனஸாகத் தள்ளுபடி கிடைக்கும். இடையில் ஓர் ஆண்டு க்ளைம் செய்தால்கூட போனஸ்  கிடைக்காது.

 

தானாக முன்வந்து கழிவு பெறுதல்!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 1000 சிசி வரை உள்ள கார்களுக்கு 1,000 ரூபாயும், 1000 சிசி-க்கு மேல் இருக்கும் கார்களுக்கு 2,000 ரூபாயும் என குறைந்தபட்ச இழப்பீட்டு அளவை வாகனத்தின் உரிமையாளருக்கு நிர்ணயித்திருக்கும். குறிப்பிட்ட அளவு வரை ஏற்படும் இழப்பீடுகளுக்கு வாகனத்தின் உரிமையாளரே பொறுப்பு. இந்தக் குறைந்தபட்ச அளவை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்த அளவை நிர்ணயித்துக்கொள்ளலாம். அதன் அளவுக்கு ஏற்ப பிரீமியத்தில் கழிவும் கிடைக்கும். இது சின்னச் சின்ன க்ளைம்களை தவிர்த்து, பிரீமியத்தில் நோ க்ளைம் போனஸ் பெற உதவும்.  இது குறைந்தபட்ச அளவு என்பது வாகனத்தின் சிசி-யைப் பொறுத்து அமையும்.

 

ஆட்டோமொபைல் மெம்பர்ஷிப்!

ஆட்டோமொபைல் அசோசியேஷனில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் பிரீமியத்தில் தள்ளுபடி பெறலாம். இது தனிநபர் பயன்படுத்தும் கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே. பிரீமியத்தில் 5 சதவிகிதம் வோன் டேமேஜுக்கு தள்ளுபடி கிடைக்கும். காராக இருந்தால் 200 ரூபாயும், இருசக்கர வாகனத்திற்கு 50 ரூபாயும் பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்.  

 

கருவிகள் இருந்தால்..!

 

உங்கள் வாகனம் திருடு போகாமல் இருக்க கருவி பொருத்தியிருந்தால், அதற்கேற்ப பிரீமியத்தில் தள்ளுபடி பெறலாம். இது,  ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தரச் சான்றிதழ் பெற்ற கருவிகளுக்கு மட்டுமே.

 

இதை பொருத்தியிருந்தால் ஆண்டு பிரீமியத்தில் 2.5 சதவிகிதம் வரை அல்லது அதிகபட்ச தள்ளுபடி 500 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும்.

 

மூன்றாம் நபர் பொருட் சேதம் !

 

மூன்றாம் நபரின் சொத்துக்களை சேதப்படுத்தினால் அதற்கும் இழப்பீடு தரவேண்டி யிருக்கும். அந்த கவரேஜ் அளவை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம். அது 6,000 மற்றும் 75,000 ரூபாய் என இரண்டு அளவுகளில் உள்ளது. இரண்டுக்கும் பிரீமியம் வித்தியாசம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. பொருட்சேதம் என்பது எப்போதுமே அதிகமாக இருக்கும். எனவே அதிகபட்ச கவரேஜ் தொகையைதேர்ந்தெடுப்பது நல்லது.

 

இன்ஷூரன்ஸை மாற்றுதல் !

 

ஏற்கெனவே உள்ள பழைய காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்கினால், ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸை இந்த காருக்கு மாற்றிக்கொள்ளலாம். நோ க்ளைம் போனஸையும் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், இரண்டு சக்கர வாகனத்திலிருந்து காருக்கு மாற்றிக்கொள்ள முடியாது.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு..!

 

மாற்றுத்திறனாளிகள் கார் வைத்திருந்தால்  அவர்களுக்கும் பிரீமியத்தில் 50 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி கிடைக்கும். ஆனால், மாற்றுத் திறனாளி என்பதற்கு மருத்துவரின் சான்றிதழ் கட்டாயம் தேவை.

 

பிரீமியத்தில் தள்ளுபடி என்பது வோன் டேமேஜுக்கு மட்டும்தான்.”

 

Nandri : vikatan

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s