பெட்ரோலுக்கு, “டாட்டா’ காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சேர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.
“எலக்ட்ரோலைசிஸ்’: இதில், “எலக்ட்ரோலைசிஸ்’ தொழில் நுட்பத்தின் அடிப்படையில், “கரன்ட்’ மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.
ivarai puducherry govt ukkuvithu intha thittathai puduvaiyil nadaimurai paduthinal,ulakame viyakum
LikeLike
நல்லாக் காது குத்தறாங்கய்யா? கொக்கு தலைல வெண்ணை வைக்கற கதை. சுண்டக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப்பணம் கதைதான்.
LikeLike
to, Kottakuppam web…
Can u give Karaikal hameed marakair contct No?
LikeLike
Hi,
Can i have his contact details to get more details about his invention.
thanks
Ramesh.R
LikeLike