ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தின் இன்றைய நிலை!


அல்  ஜஸ்ராஹ் வெளியிட்ட செய்தியை மீள்பதிவு செய்கிறோம்,

புகைப்படம் செய்தி மற்றும் ஆதரவுக்கு நன்றி அல்  ஜஸ்ராஹ் 

 

சமீபத்தில் கோட்டகுப்பதை சேர்ந்த இணயதளத்தில் பள்ளிவாசல் மதில் சுவர்இடிக்கப்பட்டதற்க்கு பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து IUML kottakuppam கட்சியின் அதிகாரபூர்வ இணையததில் பதில் கூறுவது போலவும், பொய்யர்கள்(?) என்று அடையலாம் காட்டியும், செய்தி வெளியிட்டு ஊரின் ஒற்றுமையும் மானத்தையும் காப்பாற்றினார்கள்(?). இதில் இயல்பான கேள்வி ஒன்று வருகிறது, ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தின் மெத்தனபோக்கை சுட்டிகாட்டினால், 

 

 • IUML கட்சிக்கு கோபம் வரவேண்டிய அவசியம் என்ன ?
 • ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் முஸ்லிம் லீக் -கிற்கு சொந்தமானதா ?

அல்லாஹ் வின் சொத்து இதில் பிழைப்புவாதம் செய்துக்கொண்டிருப்பவர்கள், மறுமையை நினைவில் கொள்ளுங்கள், இது பயனளிக்கவில்லை என்றால்… நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தை தேர்தல் நடத்தாமல் சில அரசியல்வாதிகள், நிர்ணயம் செய்கிறார்கள், அவர்களின் போக்கு எப்படிபட்டது என்றால் அரசு புறம்போக்கு நிலங்களை சுருட்டுவதும், பள்ளிவாசல் நிலங்களை அரசுக்கு தாரைவார்பதும், பஞ்சாயத்துக்கு வரும் நிலம் தொடர்பான வழகுகளில் தலையிட்டு வழக்குதரார்கள் இடையே பிரிவினையை அதிகபடுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடைவதுமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கொள்ளைக்கும்பல் தான் ஊரின் போக்கை நிர்ணயம் செய்கிறது, சொரனையற்ற ஒரு சமூகத்தை திட்டமிட்டு உருவாக்கி அதில் பெருமளவு வெற்றியும் கண்டுவிட்டார்கள். இதை எதிர்ப்பவர்களை தனிமைபடுதுவதும் ஊரின் ஒற்றுமை கெடுக்கிறான் என்று குறை கூறுவதும் வழக்கமான ஒன்று, இதனால் காணாமல் போனவர்கள் பலர். 

 

இதில் முஸ்லிம் லீக்கின் பங்கு என்ன?

 

மரணத்தருவாயில் இருக்கும் கட்சியை காப்பற்றவும், ஊர் நிர்வாகம் என்றால் நாங்கள் தான் என்று பெருமை பீற்றிகொள்ளவும், இருபது ஆயிரம் முஸ்லிம்கள் கொண்ட கோட்டகுப்பம் ஒட்டுமொத்த மஹல்லாவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல மாய பிம்பத்தை தங்கள் தலைமைக்கு விளம்பரப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொண்டிருகிறார்கள். இவர்களை திராவிட  கட்சியில்சாக்கடை அரசியல் செய்துக்கொண்டிருக்கும் சிலஅரசியல் வியாதிகள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

 

ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தின் அவல நிலை! 

 

இன்று உள்ள நிலையில் பள்ளிவாசலின் சொத்துகளின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடவும் வரவுசெலவு கணக்கை வெளியிடவும் யாருக்கும் துணிச்சல் இல்லை. இ.பி.எதிரில் உள்ள பள்ளிவாசல் சொத்தின் வழக்கு நிலை என்ன? ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க என்ன செயல்திட்டம் உள்ளது? இது போன்ற பல பதில் தெரியாத கேள்விகள் உண்டு! இந்த லட்சணத்தில் பைத்துல்மால் வேறு. ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே திருமண உதவி என்ற பெயரில் பணத்தை வீண்விரயமாக ஒருவருக்கு வழங்கப்பட்டது. அந்த திருமணத்தில்தான் மணப்பெண், மணமகன் முகத்துடன் போஸ்டர் அடிக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ஜகாத் என்றால் என்ன?பைத்துல்மாலின் நோக்கம் என்ன? என்ற அடிப்படை கூட தெரியாமல் எப்படி அல்லாஹ்வின் சொத்துகளை நிர்வாகம் செய்வார்கள்?

 

 
கோட்டகுப்பம் குடிகாரர்களின் கூடாராமகவும், விபச்சாரத்தின் தலைமையிடமாகவும், சூதாட்டத்தின் பிறப்பிடமாகவும் மாறிவிட்ட உண்மை எப்போது புரியவரும், நிர்வாகத்திலேயே தவறு செய்பவர்களை வைத்துக்கொண்டு? யாரை இவர்கள் கட்டுப்படுத்த முடியும்? தொலைநோக்கு பார்வையோ, இறையச்சமோ இல்லாதவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?

 

மதரசாவின் நிலை?

 

புதிய பாடத்திட்டம் இல்லமால், மாணவர்கள் சேர்க்கை குறைந்து மிகவும் மோசமாகவுள்ளது. பெண்கள் மதரசாவின் நிலை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இந்த நிலை நீடித்தால் இறை தண்டனையை எதிர்பாருங்கள், கண்டும் காணமல் இருக்கும் ஆலிம்களும், உலமாக்களும், அநியாயத்திற்க்கு துனைநிர்ப்பவர்களும் இறைவனிடம் பதில்சொல்லவேண்டிவரும் என்பதை மறந்துவிடாதிர்கள்.
  

 

இவற்றிற்கு மாற்று என்ன?

 

 • நமக்கு ஏன் வீண் வேலை என்று இல்லாமல், சுரண்டி பிழைப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் மீண்டும், மீண்டும் கொள்ளையடிக்க வாய்ப்பு தராமல் குறைந்தபட்ச இறையச்சம் உள்ளவர்களையாவது நிர்வாகத்தில் தேர்ந்தெடுத்து பள்ளிவாசலின் சொத்துக்களை காப்பாற்ற முயற்சி செய்வோம்.

 • ஆலீம்களே…!உலமாக்களே…! இஸ்லாம் என்பது மந்திரம் சொல்லி சடங்கு செய்வது இல்லை மாறாக இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி என்பதை புரிந்து, மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லி பகிரங்கமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல்களை செய்யுங்கள்.

 

 நம்மை தீமைகளிலிருந்து அல்லாஹ் காப்பானாக.

 
கோட்டகுப்பம் முஹம்மது

ஆதரவுக்கு நன்றி : அல்  ஜஸ்ராஹ் 

20 comments

 1. The jamia masjid members are land brokers and uneducated useless fellows, we are not expect anything from her.

  Like

 2. A deserved reply is given by IUML KTM website for this useless article. This website seems to be acting on behalf of TNTJ, MMK, Etc. Don’t say you are not a dependant of this movements. As said in IUML reply, you think about your leaders status of the above referred movements and their corruptions, scandals, malpractices, punishments etc…………………………. and at the same time you think about the dedications made by IUML since its commencement as well as its leaders.

  Regards
  Mohd.Nizar

  Like

 3. This website is telling lie that we are a Netural website but in acutal this site is supporter of TMMK and MMK and always publishing the news against IUML. On the other hand IUML offical website iumlkottakuppam.com is not publishing any news against TMMK and MMK and their leaders eventhough there are lot of news like corruptions, jail punishments against the leaders of TMMK & MMK This is the difference between this website and their website.

  Like

 4. தவ்ஹித் ஜமாஅத் செய்தி போட்டால் எங்களை tntj என்றும் முஸ்லிம் லீக் செய்யும் அடாவடிகளுக்கு பதில் குடுத்தால் tmmk என்றும் நீங்கள் சொல்வது ஒன்னும் புதியது கிடையாது பாய் , உங்க பழைய கமெண்ட்ஸ் பாருங்க, ஆனாலும் நாங்க பொது தான்

  Like

 5. If you are really a neutral website why you have not publishing the news against TMMK and MMK and TNTJ. MMK leader has got one year jail punishment and then came out in Bail. Intha news unga kannuku theriyalaiya. Also sometime back one news has come against IUML in Dinamani you have pasted that cutting in your website. In same Dinamani one news has came somedays back mentioning that some organisations are monitored by Central Government Intelligence Bureau for thier illegal collection and misuse of fund from abroad. In that TMMK name is also mentioned. Ithuvum unga kannuku theriyathu boss. This is your website neutral POLICY keep it up.

  If any news against IUML you are giving too much importance to publish in your website, but with regard to other organisation you are keeping quite.
  Nalla POLICY unga webiste POLICY. Intha latchanathula We are general to all yentra poi propaganda vera.

  IUML adavadithanam ? good joke. As they said in their website you are
  prooving yourself as you are all VESILADICHAN KUNJIKATHAAN.

  Like

 6. நாங்கள் நடுநிலை என்பதால் தான் நீங்கள் சொல்லும் கருத்து இங்கே பதிய முடிகிறது, இதே போல் அவர்களை சொல்லிபாருங்கள் உங்கள் கருது குப்பை குடைக்கு சென்று இருக்கும், இது கூட ஒரு அத்தாச்சி தான், புரிந்து கொள்ளுங்கள்

  Like

 7. What about your reply for Mr.Rahman asked for (Corruption cases file and punishments given to MMK, TMMK leaders) ? You have not published about this news so far. If you are running a neutral website, please prove that by publishing these news (even this are very old one).

  Mohd.Nizar

  Like

 8. Mr. Nizar

  Please keep in mind they never publish the news against TMMK, MMK and TNTJ except IUML. Just for name sake they are wearing the NEUTRAL MASK. This is the fact. Lot of news we have seen against TMMK and MMK regarding their corruptions and punishments they got including sex scandals in so many websites. But nothing has been published in this site.

  But for IUML news alone this site will screen it on 70mm. One thing keep in mind this is also a kind of victory for IUML for publishing the IUML news in the TMMK & MMK dependant website.

  THIS IS THEIR NEUTRAL POLICY. VAZHGA VAZHARGA.

  Like

 9. அட அறிவிலிகளா,tmmk,mmk, வை பற்றிய உங்களது விமர்சனங்களை நேரடியாக வையுங்கள்.களத்தில் பதில் கூற நாங்கள் தயாராக இருக்கிறோம்,அதை விட்டுவிட்டு,கோட்டகுப்பம் iuml அட்டகத்தி வீரர்களுக்கு பதில் கூறும் களம் இதுவல்ல.பள்ளிவாசல் நிர்வாகம் சீரழிந்து போனால் எனக்கும்,உங்களுக்கும் சேர்த்துதான் பாதிப்பு வரும்.அருகில் புதுவையில் பாசிஸ்டுகள் அசுர வளர்ச்சியில் இருக்கிறார்கள்.அவர்களின் முக்கிய இலக்கு கோட்டகுப்பம் தான்,இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதுவும் மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள்,இவர்களின் வாழ்கை எந்த திசையில் செல்லும் என்று என்னிபார்ததுண்டா?இதில் ஏழை,பணக்காரன்,உள்ளூர்காரன் வெளியூர்காரன்,என்றெல்லாம் வித்தியாசம் இல்லை,உங்களுக்கு புதுவையில் மாற்றுமத நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் கோட்டகுப்பதிற்கு என்ன பெயர் என்று தெரியும்.கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எண்ணாதீர்கள்.அடுத்தவன் வீட்டில் நடந்தால்தான் அது புறம் பேசும் செய்தி,நம் வீட்டில் நடந்தால்?

  Like

 10. Bonjour kottakuppam ça va?
  pourquoi fighting each other?
  TMMK,MMK,TNTJ and IUML u all r go to la paradis.

  Like

 11. naam allorum musleemthaan oruvarai oruvar kurai solvathu nam maarkathil sollavillai rasool namakku kaatitharavillai kurai solvathu sakotharan eiraichiyai thinbatharku samam theriumo thambi

  Like

 12. the muthavalli and his team crews does not have basic islamic akheeda(PRINCIPLES). they brought jamali for bayan who said in a bayan that biggest dargah in the world is madhina(RAUDHA SHARIF).asthagfirullah!!
  this idiotic and his team purposly invited him thrice to ktm to deliver speech.

  Like

 13. உபைதுல்லா அண்ணே,அடுத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி,நமக்கு வந்தா அதுக்கு பேரு ரத்தமான்னே?

  Like

 14. புறம் பேசுவது சகோதரனின் இறைச்சியை தின்பதற்கு சமம் என்றால்,அல்லாஹ்வின் சொத்துக்களை தின்பதற்கு என்ன பெயர்?

  Like

 15. we can save the both this groups from the day of judgement. the only way is that govt should take over the management as soon as possible.

  Like

 16. even thought court had asked to conduct the election. it is not possible for wakf board as there is stay order.but the board as power to appoint sp. officer till newely elected members take the charges.

  Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s