புதுச்சேரி பள்ளிகளில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி–பிரெஞ்சு மொழியை கற்பிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்–அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:–புதுச்சேரி அரசு பாடத்திட்டத்தில் தமிழக அரசை பின்பற்றி வருகிறது.தமிழக அரசு கடந்த 2006–ம் ஆண்டு கட்டாய தமிழ் பயிலும் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மொழிப்பாடமாக தமிழை மட்டுமே கட்டாயமாக பயில வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. புதுச்சேரி தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் இங்கும் அதே நிலை உருவானது.இந்திய அரசு பிரெஞ்சு அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பிரெஞ்சு மொழி கற்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் என்றும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பணிபுரிவதால் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிப்பதும் அவசியமாகிறது.
புதுவை அரசு செத்து நல்ல காரியம்.
விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தியைப் படிக்க உரிய நடவடிக்கைகள் செய்வது புத் திசாலித்தனம்.
தமிழக அரசும் இதே போன்று நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
LikeLike
புதுவை அரசுசெய்தது நல்ல காரியம்.
விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தியைப் படிக்க உரிய நடவடிக்கைகள் செய்வது புத் திசாலித்தனம்.
தமிழக அரசும் இதே போன்று நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். நெற்குப்பை தும்பி
LikeLike