விலை போகும் பள்ளிவாசல் சொத்துகள்………….


வக்ப் சொத்துக்கள் என்பது, அந்தக்காலத்தில் பள்ளிவாசலுக்கு நிரந்தர வருவாயை பெற்றுத்தர வேண்டும், அதன் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு அந்த வக்ப் வருமானம் மூலம் பல தரப்பப்பட்ட உதவிகளும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நம்முடைய நாட்டை ஆண்ட முஸ்லிம் மன்னர்களும், செல்வம் படைத்த தன வந்தர்களும், பல ஏக்கர் கணக்கில் நிலங்களை அந்தந்த பகுதி பள்ளிவாசல்களுக்கு அன்பளிப்பாக வக்ப் செய்து கொடுத்துள்ளனர்.

 

ஆனால், இன்றைக்கு பள்ளிவாசலை நிர்வகிக்கக்கூடியவர்கள், மக்கள் நம்மை இந்த நிர்வாகப்பொறுப்பை நாம் சிறந்த முறையில் பள்ளிவாசலையும் அதன் வக்ப் சொத்துக்களையும் முறையாக நிர்வகாம் செய்வோம் என்றுதான் நம்மை முத்தவல்லியாக, தலைவராக, செயலாளராக தேர்வு செய்திருக்கின்றனர். இந்த சொத்துக்கள் யாவும் நாம் பொறுப்பில் இருக்கும் வரை நம்மிடம் அமானிதமான சொத்துக்களாக இவை இருக்கும் இதில் நாம் முறை கேடான முறையில் நடந்து கொண்டால் நாளை மறுமையில் பொறுப்பாளர்கள் என்ற முறையில் இறைவன் நம்மிடம் விசாரணை செய்யும் போது இதன் காரணமாக மிகவும் கடுமையான தண்டணைக்கு ஆளாக நேரிடும் என்ற இறையச்சம் சிறிதும் இல்லாதவர்களாக வக்ப் சொத்துக்களை தங்கள் பெயரில் அல்லது தங்களது பினாமி பெயரில் தங்களது உறவினர் பெயரில் ஆக்கிரமிப்பு செய்து கொள்வது, வக்ப் சொத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டால் அதையும் மிக குறைந்த வாடகைக்கு ஏலம் விட்டு தங்கள் பெயரில் அல்லது உறவினர்கள் பெயரில் எடுத்துக்கொண்டு பிறகு வேறு நபர்களுக்கு அதிக வாடகைக்கு உள் வாடகை என்ற பெயரில் வாடகைக்கு விட்டு தாங்களே வாடகையை வாங்கிக்கொள்வது அந்த சிறிதளவு வாடகையைக்கூட பள்ளிவாசலுக்கு கொடுக்காமல் பல ஆயிரக்கணக்கில் வாடகைபாக்கி வைத்திருப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருப்பதை காணும்போது மிகவும் வேதனையாக இருப்பது உண்மை.


இதே போல் பள்ளிவாசல் நிலங்களை குத்தகை என்ற பெயரில் சிறிதளவு தொகையை கொடுத்துவிட்டு நிலத்தை காலி செய்யாமல் காலங்காலமாக தங்களது சொந்த நிலம் போல் அனுபவித்து வரும் மற்றுமத சகோதரர்களும் அதற்கு துணை போகும் நிர்வாகிகளும் மனம் திருந்தி வக்ப் நிலங்களை திரும்ப ஒப்படைக்க முன் வர வேண்டும்.


இதே இந்த நிர்வாகிகளின் சொந்த நிலமாகவோ, கடையாகவோ இருந்தால் இது போல் குறைந்த வாடகைக்கோ, குறைந்த குத்தகைக்கோ விடுவார்களா? என்பதையும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அதற்காக கணக்கில்லாமல் செலவு செய்து தம்முடைய நிலத்தை மீட்பதையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.


மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு ”சிவன் சொத்து குல நாசம்” என்ற நம்பிக்கை. அதாவது கடவுளான சிவனுக்கு உண்டான சொத்தை தவறான முறையில் அனுபவித்தால் தன்னுடைய குலமே நாசமாகி விடும் என்று நம்புகிறார்கள். இதனால், சிவன் கோவில் திருநீறைக்கூட பயந்துதான் தொடுவார்கள்.  கோயில் சொத்தை எந்த வகையிலும் அபகரிக்கக் கூடாது என்பது பொது நோக்கம். இதில் பெருமாள் சிறந்த நகைகள், ஆடை ஆபரணங்கள் அணிபவர். சிவன், புலித்தோல் ஆடையுடன் சாதாரணமாகக் காட்சியளிப்பவர். மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படுவது தவறு. அதிலும் இல்லாதவர்கள் ஏழைகளின் பொருட்களுக்கு ஆசைப்படுவது மிகப்பெரிய தவறு என்பதை உணர்த்துவதற்காகவே, சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லிவைத்தார்கள்.இது அவர்களின் நம்பிக்கை.


அது போல் நாம் வைத்திருக்கக்கூடிய வக்ப் சொத்தும் கடவுளுக்கு சொந்தமானது அதை நாம் தவறான முறையில் அனுபவித்தால் நம்முடைய குலமும் நாசமாகி விடும் என்ற அடிப்படையில் திரும்ப ஒப்படைக்க முன் வர வேண்டும்.


இஸ்லாத்தை ஏற்றிருக்கக்கூடிய பள்ளிவாசலின் நிர்வாகிகள் நாளை மறுமையில் இறைவன் ஒவ்வொறுவரின் பொறுப்புக்கள் பற்றியும் விசாரிப்பான் அந்நாளில் நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்ச உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.


வெள்ளையர்கள் நம் நாட்டை ஆண்டபோது கிருஸ்துவர்களுக்காக ஆங்காங்கே நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர் அந்த நிலங்களை முறையாக பயன் படுத்தி ஆங்கங்கே பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் முறையாக நிறுவிய  காரணத்தினால் இன்றைக்கு இந்த சமுதாயம் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளதிற்கு சாட்சி அவர்கள் இட ஒதுக்கீட்டை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்ததே!!


இதேபோல் முறையாக வக்ப் நிலத்தையும் பயன் படுத்தியிருந்தால் தமிழகமெங்கும் நம்முடைய சமுதாயத்திற்கென்று பல பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும், மருத்துவக்கல்லூரிகளும் கிடைத்திருக்கும் நாம் ஆட்சியாளர்களிடம் நமக்காக தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டிய அவல நிலையும் இருந்திருக்காது.


இந்த அடிப்படையில் கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித்காக ஆற்காடு நவாப் மற்றும் கோட்டகுப்பம் தனவந்தர்கள் ஏராளமான நிலங்களை வக்ப் செய்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த நிலங்கலெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறது.

 

 

கோட்டக்குப்பத்தில் பல அரசு புறம்போக்கு நிலம் இருப்பினும், நமது பள்ளிவாசல் நிர்வாகம் பல நிலங்கள், அரசு கட்டிடங்களுகாக தரை வார்த்து தந்துள்ளார்கள்.

சமுதாய  அக்கறையுடைய   சிலர் கொடுத்த தகவல் படி கிழ் கண்ட நமது பள்ளிவாசல் சொத்துகள் அரசுக்கு கை மாறி உள்ளது.


1 . கோட்டகுப்பம் அரசு மேல்நிலை பள்ளி இருக்கும் பல ஏக்கர் நிலம் கல்வி காக அரசுவிடம் கொடுக்க பட்டது, கொடுமை என்ன வென்றால் முன்பு அரசு மானியத்தில் இயங்கும் பள்ளியாக இந்த அதை நமதூரில் உள்ள அறிவார்ந்தவர்கள் நிர்வகிக்காமல் விட்டதால் அது முழு அரசு பள்ளி யாக மாறி விட்டது . இந்த பள்ளி நம்மிடம் இருந்தால் நமதூரில் இருக்கும் பலர் அங்கு வேலை செய்து இருப்பார்கள், அரசு சம்பளத்துடன்.

 

 

2 . கோட்டகுப்பம் முஸ்லிம் நடு நிலை பள்ளி (தூங்கு முஞ்சி ஸ்கூல்) இதுவும் மேலே இருபது போல் தான் முஸ்லிம் நிர்வாகத்திடம் இருந்தது, இப்போது அரசு பள்ளியாக உள்ளது. தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக பள்ளி வாசல் சொத்தில் இயங்கும் இந்த இரண்டு பள்ளிக்கும் ஒரு முஸ்லிம் பெயர் வைக்க பல வருடங்களாக போராடியும் இதுவரை முடிய வில்லை.

 

3 . தாய் சேய் நல விடுதி கட்டிடம்.

 

 

4. தர்கா அடுத்துள்ள நியாய விலை கடை 

 

 

5 . இன்று வரை குறைந்த வாடகையில் கோட்டகுப்பம் தலைமை தபால் நிலையம், கோட்டகுப்பம் மின்சார வாரியம் அலுவலகம், இந்த இரண்டையும் அரசு எப்போது ஆட்டைய போடா போகிறார்கள் என்று தெரிய வில்லை.

 

 

6. கோட்டகுப்பம் மெயின் ரோடு இந்தியன் வங்கி அடுத்து உள்ள இடம் இன்று வரை குறைந்த வாடகையில் கொடுத்து உள்ளனர்.

 

 

7 . கோட்டக்குப்பத்தில் இயங்கி வரும் மேல்நிலை தொட்டி பல பள்ளிவாசல் சொத்தில் தான் உள்ளது. ஆனால் இன்று நமக்கு தண்ணிக்காக அல்லாடும் நிலை உள்ளது.

 

 

மேல இருப்பது ஒரு உதாரணம் தான், பள்ளிவாசலுக்கு பல கோடி ரூபாயில் சொத்துக்கள் உள்ளது, அது பொது மக்களுக்கு பயன் படாமல் ஒரு சிலர் ஆக்ரமிப்பில் உள்ளது. ஆர்வ உள்ள இளைநர்கள் இது பத்தி கேட்டல் உங்களுக்கு இது புரியாது என்று சொல்லி சொல்லி உண்மையா யாருக்கும் தெரியாமல் செய்து விடுகின்றனர்.ஒரு காலத்தில் இலவச திருமணம், இலவச கத்னா என்று பள்ளிவாசல் பணத்தில் ஏழை பொது மக்களுக்கு  வாரி வழங்கிய பள்ளி   நிர்வாகம், இன்று எதற்கெடுத்தாலும் ஒரு பையை கையில் ஏந்தி வசூலிக்கும் கொடுமை என்ன வென்பது.

 

 

இன்று திண்டிவனத்தில் வக்ப் நிலத்தில் பஸ் நிலையம் கட்ட சமுதாயம் ஒன்று திரண்டு போராடும் நேரத்தில், நமதூர் வக்ப் சொத்துகள் மட்டும் கபளீகரம் செய்யப்படும் போது நாம் ஏன் அமைதி காக்கிறோம்.

 

 

இந்த கட்டுரை இத்துடன் முடித்து விட வில்லை, சமுதாய அக்கறை உள்ள பெரியவர்கள் 50 வருடங்களுக்கு முன்பு நமது பள்ளிவாசலுக்கு என்னென்ன சொத்து இருந்தது என்று சொன்னால், இப்போது மிஞ்சி இருக்கும் சொத்தை பாதுகாக்க முடியும். உங்களுக்கு தெரிந்த தகவல்களை எமக்கு எழுதி அனுபினால், வரும் சந்ததியினர்க்கு உண்மை சொன்னவர்களாக இருப்போம்.

 

 

அனுப்ப வேண்டிய முகவரி : kottakuppam@me.com

2 comments

  1. கோட்டக்குப்பத்தில் மின்வெட்டை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்…! பங்கேற்காத ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம்..!! மக்கள் நலன் அக்கறை இல்லாத நிர்வாகமா..? அல்லது iuml நிர்வாகமா…???
    இது ஊருக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். பேருக்காக நடத்தியிருந்தால் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடத்தி பிற சமுதாய மக்களிடமும் நற்பெயர் பெற்றிருக்க முடியும்.
    TNTJ வே நடத்திரிந்தலும் ஊர் மக்கள் நலனுக்காக ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் பங்கேற்றிருந்திருக்க வேண்டும்.

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s