உள்ளாட்சி தேர்தல் வாக்குறுதி – FOLLOW UP


உள்ளாட்சி தேர்தல் வாக்குறுதி – FOLLOW UP

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நமது இணையத்தளத்தில் கோட்டகுப்பம் புது பேரூராட்சி தலைவர் ஊராட்சி தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? என்று நாம் கேட்டு இருந்தது உங்களுக்கு தெரியும். பின்னர் பேரூராட்சி தலைவர் தரப்பு நமக்கு அது சம்மந்தமாக சில விளக்கம் கொடுத்தனர். அதன் விபரம் வருமாறு. நமது அறிவிப்பு வந்தவுடன் பேரூராட்சி தலைவர் சென்னை சென்று பல அமைச்சரின் அலுவலகத்தில் நேரில் சென்று மனு கொடுத்து வந்துள்ளார்கள். மேலும் கிழ் கண்ட விளக்கமும் தந்துள்ளார்கள்.

நமது கோரிக்கையும் அதன் விளக்கமும் ( சிகப்பு நிறத்தில் இருப்பது)

 •  நிரந்தர மின்தடையை போக்க கோட்டக்குப்பத்தில் துணை மின்நிலையம்…. இது சமந்தமாக மின் துறை அமைச்சர் அவர்கள் கோட்டகுப்பம் அடுத்துள்ள பொம்மையார் பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்க இடம் பார்த்து இருபதாகவும், கூடிய விரைவில் அங்கு பனி துவங்கும் என்று உறுதியுடன் கூறினார்.


 • கோட்டக்குப்பம் பகுதியில் படுக்கை அறையுடன் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலையம்…இது சமந்தமாக சுகாதார துறை அமைச்சரின் அலுவலகத்தில் மனு கொடுத்து வந்துள்ளனர், நல்ல இடம் கிடைத்த உடன் புதிய சுகாதார நிலையம் நமது ஊர்க்கு வரும்.


 • புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து சுத்தமான, சுவையான குடிநீர்…..

 • அணைத்து தெருக்களுக்கு  சாக்கடை வசதி …..

 • அணைத்து தெருக்களுக்கு சோடியம் விளக்குடன் கூடிய மின்கம்பம் …….

 • சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்கா…….

 • கடல் அரிப்பை தடுக்க பலம் வாய்ந்த தடுப்பு சுவர்.

 • அணைத்து தெருக்களுக்கும் குப்பை தொட்டி…….., இதற்கு உள்ளாட்சி அமைச்சரின் அலுவலகத்தில் இதற்கு மனு கொடுத்து இருகிறார்கள்.  விரைவில் இந்த பணிகள் துவங்கும்.மேலும் அணைத்து தெருக்களும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படம் என்று உறுதி கூறினர்.


  «பார்போம் இந்த வேலை எவ்வளவு சீக்கிரத்தில் முடியும் என்று !!!»

4 comments

 1. துணை மின் நிலையம் அமைக்க அரசிடமிருந்து அனுமதி கிடைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது,ஆரம்ப சுகாதார நிலையம் ஒதுக்கியும் 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.ஆனால் இந்த திட்டங்களுக்கெல்லாம் இடம் இல்லை என்று காரணம் கூறி நிறுத்தி வைத்து இருகிறார்கள்.ஏக்கர் கணக்கில் புறம்போக்கு நிலங்களை வளைப்பதில் கட்டும் ஆர்வத்தை நமதூர் அரசியல் வாதிகள் மக்களுக்கான கடமைகளில் கட்டுவதில்லை.தேர்தல் நேரத்தில் கோடிகளை கொட்டி வெற்றி பெற்று மக்கள் சேவை செய்யவா வருகிறார்கள்?மக்கள் விழிக்காத வரை இந்த நிலை தொடரும்.

  Like

 2. //நல்ல இடம் கிடைத்த உடன் புதிய சுகாதார நிலையம் நமது ஊர்க்கு வரும்.//
  வெளி ஊரில் இருந்து இடம் வாங்கி வந்து கோட்டக்குப்பத்தில் வைப்பார்களா ? இத்தனை நாளாக நமதூரில் இருக்கும் இவர்களுக்கு எந்த இடம் சரியான இடம் என்று தெரியாதா

  Like

 3. மக்களா கொஞ்சும் நாள் அமைதியாக இருக்கும். நான் நடத்த தேர்தலில் வட்டிக்கு கோடி கணகில் பணம் வங்கி அதை மக்கள் இடம் ஒரு ஓட்டு 500 /- வீதம் கொடுத்து இந்த பதவிக்கு வந்து இருகான். முதலில் எனது முதுலை எப்படி எடுப்பது என்று தெரிவிக்காமல் தவித்தி கொண்டு இருகான் நான் ப்ளீஸ் வெயிட் …. NO HURRY…

  Like

 4. நண்பா!!! கொஞ்சும் நாள் அமைதியாக இருக்கும். நான் நடத்த தேர்தலில் வட்டிக்கு கோடி கணகில் பணம் வங்கி அதை மக்கள் இடம் ஒரு ஓட்டு 500 /- வீதம் கொடுத்து இந்த பதவிக்கு வந்து இருகான். முதலில் எனது முதுலை எப்படி எடுப்பது என்று தெரிவிக்காமல் தவித்தி கொண்டு இருகான் நான் ப்ளீஸ் வெயிட் ….

  Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s