உள்ளாட்சி தேர்தல் பயனுள்ள விபரம்


உள்ளாட்சி தேர்தல் – பயனுள்ள விபரம் 

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

 * எந்த வேட்பாளரும் சாதி-மத பிரச்சினை உருவாகும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

 * வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

 * அரசு, தனியார் நிலம், கட்டிடம், சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.

  * ஒரு கட்சியின் கூட்டம் நடைபெறும் இடத்தின் வழியாக, மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக்கூடாது.

 * வேட்பாளர் முன் அனுமதி பெற்று பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்வதற்கு செல்லும் இடம் குறித்து

    முன்னதாகவே முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தாமாகவே இந்த முடிவை மாற்றக்கூடாது.

 * ஊர்வலம்- பிரசாரத்துக்கு அனுமதி பெற்று செல்லும் இடங்களில் போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது.

 * போலீசாரின் அறிவுரைகளையும், உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

 * கொடி, தோரணங்கள், பேனர்கள், போன்றவற்றை பிரசாரம், ஊர்வலம், பொதுக்கூட்டத்தின் போது மட்டும்

    அனுமதி பெற்று அமைக்கலாம். தேவையில்லாமல் இவற்றை பயன்படுத்தக்கூடாது.

 * மற்றொரு கட்சி தலைவரையோ, வேட்பாளரையோ அவமதிக்கும் வகையில் கொடும்பாவி எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

 * அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரசார கூட்டம் நடத்தவேண்டும். இதில் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

 * அரசு சார்ந்த இடங்களை கட்சி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது.  

 * தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது முதல், அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ,    அரசு உதவிகளையோ, மானியங்களையோ வழங்ககூடாது.

 * உள்ளாட்சி பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.

 * அரசு திட்டங்களை தொடங்குதல், சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்யக்கூடாது.  

 * ஓட்டுப் போட பணம் கொடுப்பது, வாக்காளர்களை திரட்டுவது, ஆள் மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுவது போன்றவை கடும் குற்றமாக கருதப்படும்.

 * ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 * குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.

 * வாக்கு சாவடியில் இருந்து 100 அடி தூரத்துக்குள் நின்று ஆதரவு கேட்பதும், வாக்காளர்களை  ஓட்டுப்போட வாகனங்களில் அழைத்து செல்வதும் ஊழல் குற்றமாக கருதப்படும்.

 * ஓட்டு போடும் வாக்காளர்கள், அனுமதி பெற்ற தேர்தல் ஏஜெண்டுகள், தவிர அரசியல் பிரமுகர்கள் யாரும் ஓட்டுச் சாவடிக்குள் நுழையக்கூடாது.  

* ஓட்டு போடுவதற்கான புகைப்படத்துடன் கூடிய “பூத்சிலிப்”களை அரசியல் கட்சிகள் கொடுக்ககூடாது.

 * மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் ஊழியர்களே ஒரு வாரத்துக்கு முன்பு வீடு வீடாக சென்று “பூத்” சிலிப்களை கொடுப்பார்கள்.

 * வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

 * தேர்தல் ஆணையத்தின் விதிகளை கடைபிடிக்காத வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.

 * வாக்காளர் பட்டியலில் பெயர் படம் இருந்தாலும், மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் அடையாள அட்டை, அல்லது மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஒன்றும் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் விபரம் :

விழுப்புரம் – மாலிக் பெரோஷ் கான்

Complaint Cell (Toll Free): 1800-4257072, 1800-4257073, 1800-4257074

கோட்டக்குப்பத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாம் வாக்களிக்கும் பூத்தை கிழே

இருக்கும் லிங்கை அழுத்தி தெரிந்து கொள்ளுங்கள் 

உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !!              உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!

வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !!                        சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s